கடைக்குட்டி சிங்கத்தில் சூர்யா ஸ்பெஷல் - உறுதியான தகவல்.!

July 13, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி முதல் முறையாக இணைந்து பணியாற்றியுள்ளனர். சூரியாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி முதல் முறையாக பாண்டியராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.


kadaikutty singam
முழுக்க முழுக்க விவசாயத்தையும் கூட்டு குடும்பத்தை பாசத்தையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் சற்று அரசியலையும் பேச உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மேலும் சூர்யா ரசிகர்களுக்கும் இந்த படத்தில் சர்ப்ரைஸ் உள்ளது. அது என்னவென்றால் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்களுக்கும் படம் செம ட்ரீட்டாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடியுங்கள் எனவும் அன்பு கோரிக்கை வைத்து வருகின்றனர்.


kadaikutty singam