தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!

January 13, 2018


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா, கீர்த்தி சசுரேஷ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்திருந்த தானா சேர்ந்த கூட்டம் படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி இருந்தது.


suriya




சூர்யாவின் படத்திற்கு தமிழகம், கேரளாவையும் தாண்டி அமெரிக்காவிலும் எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு முன்னதாக வெளியாகி இருந்த 24 படமும் அமெரிக்காவில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது.


இதனையடுத்து தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தின் அமெரிக்கா வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. முதல் நாள் பிரீமியர் ஷோவில் மட்டும் படம் ரூ 30 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.