சர்வைவா சாதனையை சரிய வைத்த ஆளப்போறான் தமிழன் - மெர்சல் தகவல்.!

August 12, 2017


அஜித், விஜய் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் அப்படி இருப்பதில்லை, இவர்கள் எப்போதுமே ஆரவாரத்துடனே இருப்பார்கள்.


sarvaiva
அஜித் நடிப்பில் வெளிவரவுள்ள விவேகம் படத்தின் சர்வைவா பாடல் சாதனையை மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் தற்போது பின்னுக்கு தள்ளியுள்ளது.


மெர்சல் படத்தின் பாடல் நேற்று யு ட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது, இன்று காலை வரைக்குள் பாடலை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர், 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.


ஆனால் விவேகம் படத்தின் சர்வைவா பாடல் இதே கால கட்ட அளவில் 8 லட்சம் பார்வையாளர்களையும் 90 ஆயிரம் பேர் லைக் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.