உலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு விமர்சையாக கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்!

July 21, 2018


ஜூலை 23 ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் இந்நாளில் சூர்யாவின் ரசிகர்கள் எப்போதும் அவருடைய பிறந்தநாளை நற்பணிகள் , இரத்த தானம் மற்றும் பல நல்ல விஷயங்களை செய்து விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.


suriya
இந்த வருடமும் அதே போல் உலகம் முழுவதும் உள்ள சூர்யா ரசிகர்கள் மற்றும் சூர்யா நற்பணி மன்றத்தினர் தங்கள் நாயகனின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளனர். வட சென்னை பகுதி சூர்யா நற்பணி மன்ற நிர்வாகிகள் 10 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா , இரத்ததான முகாம் , அன்னதானம் மற்றும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களை நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தி வருகிறார்கள்.


மேலும் ஜூலை 23 அன்று பிறக்கும் 10 குழந்தைகளுக்கு வட சென்னையை சேர்ந்த சூர்யா நற்பணி மன்றத்தினர் தங்க மோதிரம் வழங்க உள்ளனர். இது தவிர கோவை , திருச்சி , மதுரை , நெல்லை என தமிழகம் முழுவதும் உள்ள சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்றத்தினர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா , விளையாட்டு போட்டி , சூர்யாவின் திரைப்படம் திரையிடல் என்று பல விஷயங்கள் நடைபெறவுள்ளது.


இதே போல் கேரளா , ஆந்திரா , தெலங்கானா , கர்நாடகா , மும்பாய் என இந்தியா முழுவதும் உள்ள சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவருடைய பிறந்தநாளை பிரமாண்ட கொண்டாடவுள்ளனர்.

இது தவிர இலங்கை , சிங்கப்பூர் , மலேஷியா , அமெரிக்கா , லண்டன் போன்ற வெளிநாடு வாழ் சூர்யா ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.