திடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.!

July 21, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர்கள் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ். இவர்கள் இருவரும் தற்போது பிஸியாக தங்களது படங்களில் நடித்து வருகின்றனர்.


siva
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படத்தின் டீஸர் மற்றும் ஆடியோ லான்ச் வரும் ஆகஸ்ட் 3-ல் மதுரையில் நடைபெற உள்ளதாக நேற்று மாலை 7 மணிக்கு ஒரு சிறிய விடியோவுடன் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனை ரசிகர்கள் பலவிதமான ஹேஸ்டேக்குகளுடன் ட்ரெண்ட் செய்து கொண்டாடினார்கள்.


இதனையடுத்து ஒரு அரை மணி நேர இடைவெளியில் தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோர் இணைந்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தின் புதிய லோகோக்களை தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.


siva

இந்த இரண்டு படங்களின் ஹேஸ்டேக்குகளும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து இருந்தன.