பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகனுக்கு நிகழ்ந்த திடீர் மன மாற்றம் - ஏன்? என்ன நடந்தது?

September 14, 2017


பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது, வெறும் 6 பேர் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.


bigg boss
மேலும் தற்போதெல்லாம் கொடுக்கப்படும் டாஸ்குகள் பார்க்கும் பார்வையாளர்களுக்கே பயத்தை உண்டாக்குகிறது, இதனால் ஆரம்பத்தில் இருந்தே இருப்பவர்கள் எப்படி இதெல்லாம் சமாளிக்கிறார்கள் என யோசிக்க வைக்கிறது.


இந்நிலையில் நேற்று சினேகன் டாஸ்கில் ஏமாற்றியதாக கூறப்பட்டது அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது, இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள புதிய ப்ரோமோவில் சினேகன் எனக்கு ஜெயிக்கும்னு இருந்த ஆசையே போய்டுச்சு என மனமுடைந்து பிந்துவிடம் கூறுகிறார்.


இவரது இந்த மன மாற்றத்தால் நிகழ்ச்சியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி உள்ளது.