வலுக்கும் எதிர்ப்பு, சர்காரிடம் சரண்டரான அன்புமணி - நடந்தது என்ன?

July 12, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எல்லையில்லா எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


sarkar
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜயின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது. ஆனால் அந்த போஸ்டரில் தளபதி விஜய் புகைபிடிப்பது போன்ற கெட்டப்பில் இருந்ததால் அன்புமணி ராமதாஸ் விஜயை மோசமாக விமர்சனம் செய்து இருந்தார்.


மேலும் சிகிரெட் நிறுவனங்களில் விஜய் லஞ்சம் வாங்கி விட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இதனால் அன்புமணி மற்றும் பா.ம.க-வுக்கு எதிராக பேச தொடங்கினர். எதிர்ப்புகள் அதிகமாகத் தொடங்கியதால் தற்போது சர்காரிடம் சரண்டராகியுள்ளார் அன்புமணி.


sarkar

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இவரிடம் விஜயை மட்டும் டார்கெட் செய்வது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தனர். எப்போதும் ஆவேசமாக பதில் கொடுக்கும் அன்புமணி இந்த முறை கொஞ்சம் அடக்கியே வாசித்துள்ளார்.

விஜய் என் தம்பி மாதிரி, அவருக்கு புற்று நோய் வந்து விட கூடாது என்பதற்காக தான் அப்படி பேசினேன் மற்றபடி ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.