விஜய் பற்றி பொய்யான தகவலை பரப்புகிறார்கள் - ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நடிகர்.!

September 13, 2017


தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்திருப்பவர், நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என்ற பெயரை பெற்றிருப்பவர்.


vijay
பெரும்பாலும் அனைவரும் விஜய் படப்பிடிப்புகளில் பேச மாட்டார், அமைதியாகவே இருப்பார் என்று பலர் கூற கேட்டிருக்கிறோம், இதனை கேட்டு ஒரு நடிகரும் ஏமார்ந்துள்ளார்.


வேலாயுதம் படப்பிடிப்பின் போது லொள்ளு சபா புகழ் சுவாமி நாதன் விஜயிடம் பேசவே இல்லையாம், பின்னர் ஒரு நாள் படப்பிடிப்பின் போது விஜய்க்கு வணக்கம் சொல்ல உடனே விஜய் சுவாமி நாதன் அண்ணா நான் உங்க காமெடிலாம் பார்த்துக்கிருக்கேன் ரொம்ப நல்ல இருக்கு என கூறினாராம்.


இதனை கேட்ட சுவாமிநாதன் ஒரு நிமிடம் அப்படியே ஷாக்கில் உறைந்து போய்ட்டாராம், இதனை பற்றி சுவாமி நாதன், விஜய் பேசவே மாட்டார் என பொய்யான வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் என மனதில் நினைத்து கொண்டாராம்.