சிவாஜி, கமல் நடிக்க வேண்டிய கதையில் நான் - விஜய் சேதுபதி சொன்ன சுவாரஷ்யம்.!

July 19, 2018


தமிழ் சினிமாவில் இன்று நம்பிக்கையான நடிகராக விளங்கி வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது பாலாஜி தரணி தரண் இயக்கத்தில் சீதக்காதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.


sivaji
இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயது முதியவராக நடித்து வருகிறார். இதுக்காக ஹாலிவுட் கலைஞர்களை அழைத்து விஜய் சேதுபதிக்கு மேக்கப் போட்டு இருந்தனர். அந்த மேக்கிங் வீடியோ மேக்கிங் ஆப் ஐயா என்ற பெயரில் வெளியாகி படு வைரலாகி இருந்தது.


இந்த படத்தை பற்றி விஜய் சேதுபதி சிவாஜி, கமல் போன்ற லெஜெண்ட்டுகள் நடிக்க வேண்டிய படம். அவர்களை அணுக முடியாததால் வேறு வழியில்லாமல் பாலாஜி என்னை கமிட் செய்தார். நானும் சிறப்பாக நடித்து கொடுத்து இருக்கிறேன் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.


sivaji

மேலும் இந்த படத்தில் நான் நாடக கலைஞராக நடிக்கிறேன். நிச்சயம் இந்த படம் கலைக்கு அழிவில்லை என்பதை உணர்த்தும் என கூறியுள்ளார்.