வல்லவன் படத்தால் வந்த விபரீதம், கலைஞரிடம் அடி வாங்கிய சிம்பு - வெளிவராத தகவல்கள்.!

August 11, 2018


தமிழ் சினிமா, அரசியல் என அனைத்திலும் தலை சிறந்து விளங்கி வந்தவர் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி. இவர் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உடல் நாளை குறைவு, வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.


vallavan
இந்நிலையில் நடிகர் சிம்பு வார இதழ் ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில் எனக்கும் கருணாநிதி தாத்தாவுக்கும் இடையே நல்ல நட்பு உண்டு, அவரிடம் நான் கன்னத்தில் அடி வாங்கியுள்ளேன் என கூறியுள்ளார்.


வல்லவன் படத்தை இயக்கி கொண்டிருந்த தருணம், கருணாநிதி தாத்தா என் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு தெரியாமல் அவருடைய பேனாவை திருடி கொண்டேன். மேலும் அவர் என்னிடம் வல்லவன் படம் போட்டு காண்பிக்க சொன்னார்.


vallavan

அந்த சூழலில் என்னால் போட்டு காண்பிக்க முடியவில்லை. அதன் பிறகு அவரது குடும்ப விழா ஒன்றிற்கு நான் சென்றிருந்தேன், அப்போது என்னை அழைத்து என் கன்னத்தில் பாசமாக பளார் என ஒரு அடி கொடுத்தார்.

அதன் பின்னர் அடுத்த முறை எனக்கு வல்லவன் படம் போட்டு காண்பிக்கவில்லை என்றால் இன்னொரு கன்னத்திலும் அடி விழும் என கூறினார். இவ்வாறாக சிம்பு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.