எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு லண்டனுக்கு சென்ற ஸ்ருதி - ஏன் தெரியுமா?

April 21, 2017


இயக்குனர் சுந்தர் சி தற்போது சங்கமித்ரா எனும் பெயரில் பாகுபலியை மிஞ்சும் அளவுக்கு ஒரு பிரம்மாண்ட படத்துக்கான கதையை தயார் செய்து வருகிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதானாம்.


shruti haasan
London


ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் டைட்டில் ரோலில் நடிக்கவுள்ளார். சரித்திர படம் என்பதால் இப்படத்தில் பல வாள்வீச்சு சண்டைக்காட்சிகள் உள்ளது. இதற்காக தற்போது ஸ்ருதி ஹாசன் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு லண்டனில் சண்டைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.