செப்டம்பர் 13-ல் வெளியாகும் சீமராஜா - கொண்டாடும் ரசிகர்கள்.!

July 12, 2018


தமிழ் சினிமாவில் தன்னுடைய தன்னம்பிக்கையால் திறமையாலும் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார்.


seemaraja
இந்த படம் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதி இல்லாமலே ரிலீஸ் தேதியை அறிவித்து இருந்தனர். இதனால் படம் சொன்ன தேதியில் வெளியாகுமா? என்ற சந்தேகமும் எழுந்து இருந்தது


இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் சீமராஜா படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜாவுக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அந்த அறிக்கையில் சீமராஜா படத்தை சொன்னபடி செப்டம்பர் 13-ம் தேதி வெளியிட அனுமதி அளிப்பதாக கூறியுள்ளது.

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


seemaraja