சர்கார் சர்ச்சை: தளபதி செய்தது சரியா? தவறா? - விஜய் சேதுபதி ஓபன் டாக்.!

July 19, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது நடித்து வரும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைபிடிக்கும் வகையில் இருந்த போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.


sarkar
இந்த போஸ்டரால் விஜய்க்கு எதிராக அன்புமணி ராமதாஸ் மற்றும் சில அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வந்தன. இது குறித்து விஜய் சேதுபதி ஜூங்கா ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சர்கார் சர்சையை பற்றி விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.


புகைபிடிக்கும் காட்சிகளுக்காக நடிகர்களை வம்பிழுப்பது சரியில்லை. முதலில் சிகரெட் நிறுவனங்களுக்கு எதிராக குரல் கொடுத்து அதனை முற்றிலுமாக தடை செய்யும் முயற்சியை மேற்கொள்ளுங்கள் என பல சமுக ஆர்வலர்கள் சொன்னதை போலவே விஜய் சேதுபதியும் கருத்து தெரிவித்துள்ளார்.


sarkar