தளபதி விஜய்க்காக எஸ்.ஏ.சி செய்த விஷயம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

தளபதி விஜய்க்காக எஸ்.ஏ.சி செய்த விஷயம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

November 14, 2017


தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய படங்களை வரவேற்க மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.


thalapathyசமீபத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஜயின் தீவிர ரசிகர் ஸ்ரீநாத் என்பவர் விபத்தில் இறந்து விட்டார், இவருடைய ஏழ்மையான குடும்பத்திற்கு உதவுமாறு தளபதி விஜய்க்கு கோரிக்கை வந்தது, இதனையடுத்து தளபதி விஜய் சார்பாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் ஸ்ரீநாத் குடும்பத்திற்கு நேரில் சென்று நிதி உதவி அளித்தார்.


இதனையடுத்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சி-யிடம் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு எஸ்.ஏ.சி விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது எனக்கு தெரியாது. இதனை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் ஆனால் விஜய் இன்று நல்ல நடிகராக விளங்கி வருகிறார் என கூறியுள்ளார்.