போருக்கு தயாராக இருங்கள் - ரஜினியின் சர்ச்சைக்குரிய கருத்து

போருக்கு தயாராக இருங்கள் - ரஜினியின் சர்ச்சைக்குரிய கருத்து

May 19, 2017


நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.5வது நாளான இன்று அதாவது நிறைவு நாளிலும் ரஜினிகாந்த் அரசியல் கருத்துக்களை பேசினார்


rajiniBe prepared for war - Rajini's controversial opinion


அதில் ரஜினி பேசிய கருத்துக்கள் தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.அவர் கூறும்போது ; அந்த காலத்தில் எல்லாம் ராஜாக்களிடம் லட்சக்கணக்கான படை பலம் இருக்காது. 10 ஆயிரம், ஐந்தாயிரம் வீரர்களை கொண்ட படைகள் இருக்கும். அவர்களால் நிர்வகிக்கும் அளவுக்குத்தான் படை பலம் இருக்கும்.


ஆனால் போர் என்று வரும்போது நாட்டிலுள்ள ஆண்கள் எல்லோரும் சேர்ந்து வந்து போரிடுவார்கள். அதுவரை பிரஜைகள் தங்கள் வேலைகளைத்தான் பார்ப்பார்கள். கபடி, குஸ்தி, ஜல்லிக்கட்டு இதுபோன்ற வீர விளையாட்டுக்களையெல்லாம் வைத்திருந்ததே ஆண்கள் எப்போதும் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

போர் வரும்போது சுய மானத்திற்காக, மண்ணுக்காக குடிமக்களும் சேர்ந்து போரிடுவார்கள். அந்த மாதிரி, எனக்கும் கடமைகள் இருக்கிறது, தொழில் உள்ளது, வேலை உள்ளது. உங்கள் கடமைகளை செய்யுங்கள். போர் வரும்போது பார்த்துப்போம். ஆண்டவன் இருக்கான். நன்றி. என குறிப்பிட்டார்.

ரஜினியின் போர் பற்றிய கருத்துக்கு தான் சுப்பிரமணியன் சாமி அவசரமாக, ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணத்தை தருகின்றன.ஆனால், வழக்கத்தைவிட அதிகமாக சு.சாமி போன்றோர் ரஜினிக்கு எதிராக சாடுவதை பார்க்கும்போது, இது வழக்கம்போலான, வெற்றுப் பேச்சாக இருக்காது என்ற எண்ணம் பரவலாக எழுந்துள்ளது.

ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் போன்றோரையெல்லாம் பாராட்டி பேசிய ரஜினி இறுதியில் இவர்கள் இருந்தும் சிஸ்டம் சரியில்லை என கூறிவிட்டார்.இவரின் இந்த கருத்து சிஸ்டத்தை சரி செய்ய நான் அரசியலுக்கு வருவேன் என்பது போல உள்ளது.முக்கியமாக போருக்கு தயாராக இருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு கருணாநிதி உடல் நலம் குன்றிய நிலையில், ஜெயலலிதா இல்லாத சூழலில், மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு மாறியுள்ள இந்த நிலையைவிடவா வேறு ஒரு போர்க்காலம் தேவை என்பதே நடுநிலையாளர்கள் கேட்கும் கேள்வி. இதுதான் மோசமான சூழல் என கருதினால் உடனே ரஜினி அரசியலுக்கு வரலாமே ?ஒரு வேளை ரஜினி பேசுவது சினிமா ஸ்டன்ட்தானா என்ற கேள்வியும் எழுகிறது.