பல படங்களில் நடித்த ரங்கம்மாள் பாட்டிக்கு இப்படியொரு நிலையா? - புகைப்படம் உள்ளே.!

February 14, 2018


தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து நம்மை சிரிக்க வைத்து வந்தவர் ரங்கம்மாள் பாட்டி. தற்போதும் எதாவது படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் ரூ 500 சம்பளத்திற்காக நடித்து வருகிறார்.


rangammal
இந்த சம்பளம் போதாது என்பதால் இவர் வறுமையின் காரணமாக மெரினா கடற்கரையில் பிச்சை எடுப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.


இதனையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் ரங்கம்மாள் பாட்டிக்கு உதவுவதற்காக மெரினா கடற்கரையில் அவரை தேடி சென்ற போது அவர் பிச்சை எடுக்கவில்லை, வறுமையின் காரணமாக ear phone போன்ற பொருட்களை விற்று வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.


பின்னர் அவருக்கு நடிகர் சங்கம் சார்பாக ரூ 5000 வழங்கியுள்ளனர். வயதான காலத்திலும் தன்னம்பிக்கையுடன் உழைத்து சாப்பிடும் ரங்கம்மாள் பாட்டிக்கு ஒரு சல்யூட்.
Latest