ரஜினிக்கு நண்பராகும் முன்னணி நடிகர் - #SuperStar165 அப்டேட்.!

July 12, 2018


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் ஒரு புறம் பிஸியான அரசியலில் இறங்கி இருந்தாலும் அதே அளவுக்கு அடுத்தடுத்த படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.


super star
தனுஷின் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கி இருந்த காலா படத்தை நடித்ததை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.


super star

இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ரஜினிக்கு நண்பராக நடிக்க பஹத் பாசில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.


மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பஹத் பாசில் வேலைக்காரன் படத்தின் மூலமாக தமிழில் நடித்து மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.