ராகுல் காந்தி - பா.ரஞ்சித் டெல்லியில் சந்திப்பு

July 11, 2018


காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இயக்குநர் பா.ரஞ்சித்தை டெல்லியில் சந்தித்துள்ளார்.


ragul gandhi
டெல்லி சென்றுள்ள இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துள்ளனர். இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.


அதில் அவர், மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பிளாக் பஸ்டர் படங்களை தமிழில் இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித்தை நேற்று டெல்லியில் சந்தித்தேன். அவருடன் நடிகர் கலையரசனையும் சந்தித்தேன் என்று கூறியுள்ளார்.


ragul gandhi

இந்தச் சந்திப்பின் போது, சமூகம், அரசியல், சினிமா ஆகியவை பற்றிப் பேசியதாகவும் அவர் இது போன்ற உரையாடல்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் என்றும் ராகுல் கூறியுள்ளார்.