தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைக், இவ்வளவு கோடி நஷ்டமா? - அதிர்ச்சியாக்கும் தகவல்.!

March 13, 2018


தியேட்டர்களில் கியூப் போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் படங்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்ப அதிக கட்டணத்தை வசூலிப்பதால் கடந்த மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என அறிவித்து இருந்தனர்.


producer council
இதனால் தியேட்டருக்கு வரும் மக்களின் அளவு மோசமாக குறைந்தது, கூட்டம் இல்லாததால் பல தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டது, மேலும் வரும் 16-ம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என விஷால் அறிவித்துள்ளார்.


தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைக்கால் இதுவரை சுமார் ரூ 250 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் ஸ்ட்ரைக் மேலும் தொடரும் என்பதால் நஷ்ட மதிப்பு மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.