சீமராஜா முதல் நாள் வசூல், அதிர வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் - போட்றா வெடிய.!

September 14, 2018


பொன்ராம் இயக்கத்தில் 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் என பல நட்சத்திர பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள படம் சீமராஜா. நேற்று இப்படம் சில பிரச்சனைகளை சந்தித்து பின்னர் வெற்றிகரமாக திரைக்கு வந்திருந்தது.


seemaraja
ரசிகர்கள் மத்தியிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் காமெடி, சண்டை காட்சிகள், காதல் காட்சிகள் என அனைத்துமே அருமை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் சில இடங்களில் அஜித்தை பற்றிய வசனங்களும் இடம் பெற்றிருப்பது தல ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.


இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஆர்.டி ராஜா ட்விட்டர் பக்கத்தில் படத்தின் வசூல் குறித்து பதிவு செய்துள்ளார். இதுவரை சிவகார்த்திகேயன் திரைப்பயணத்திலேயே முதல் நாள் வசூல் சீமராஜா படத்திற்கு தான் கிடைத்துள்ளது. புதிய சாதனை படைத்துள்ளார் என கூறியுள்ளார்.