தமிழில் முன்னணி இயக்குனர் படத்தில் ப்ரியா வாரியர்? - வெளிவந்த உண்மை தகவல்.!

April 16, 2018


மலையாள சினிமாவில் ஒரு அடார் லவ் என்ற படத்தின் பாடலில் கண்ணடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் ப்ரியா வாரியர்.


priya varier
இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடிக்க உள்ளதாகவும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது, பின்னர் கே.வி.ஆனந்த் இந்த தகவலை மறுத்திருந்தார்.


priya varier

இதனையடுத்து சமீபத்தில் பிரபல இயக்குனரான நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல் ஒன்று வைரலாகி இருந்தது. ஆனால் தற்போது இந்த தகவலும் பொய்யானது தான் என தெரிய வந்துள்ளது.


பிரியா வாரியார் தற்போது ஒரு அடார் லவ் என்ற படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம். இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ளதாம்.