கேரளாவுக்காக ரூ 1 கோடி நிதியுதவி கொடுத்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!

August 17, 2018


கனமழை காரணமாக கேரளா மாநிலமே வெள்ள காடாக மாறியுள்ளது. பல ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கி போயுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.


kerala
இதனால் இந்தியா முழுவதில் உள்ள மக்கள் திரையுலக பிரபலங்கள் கேரள முதல்வரின் மழை நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர்.


தமிழ் சினிமாவில் கமல், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால், சித்தார்த், சூர்யா, கார்த்தி, ஸ்ரீ பிரியா, ரோகினி மற்றும் பலர் நிதியுதவி அளித்து வரும் வேளையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவி நிறுவனம் கேரளாவிற்காக ரூ 1 கோடி நிதியுதவி அளித்துள்ளது.


kerala

இதற்கு முன்னதாக விஜய் டிவி கமல்ஹாசனுடன் சேர்ந்து ரூ 25 லட்சம் நிதியுதவி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.