ஐயோ தல அதுவும் வேணாம், இதுவும் வேணாம் ப்ளீஸ் - கெஞ்சும் ரசிகர்கள்.!

ஐயோ தல அதுவும் வேணாம், இதுவும் வேணாம் ப்ளீஸ் - கெஞ்சும் ரசிகர்கள்.!

October 13, 2017


தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர்.

இவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அஜித்தை திரையில் மட்டுமே பார்த்தால் கூட போதும் என துடிக்கும் ரசிகர்களே அதிகம்.


thala



இந்நிலையில் தற்போது அஜித்தின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்க உள்ளதாக தகவல் உறுதியாக உள்ளது, இந்த தகவல் பெரும்பாலான ரசிகர்களை புலம்ப வைத்துள்ளது.


அவர்கள் கூறுவது என்னவென்றால் தல அஜித் சிவாவுடன் 10 படங்கள் வேண்டுமானாலும் நடிக்கட்டும், ஆனால் கொஞ்சமாவது இடைவெளி இருக்க வேண்டும் என கருதுகிறோம்.


மேலும் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் போர் அடித்து விட்டது, வேறு எதாவது கெட்டப்பில் நடியுங்கள் என கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தல அஜித் பல இயக்குனர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது என கூறியுள்ளனர்.

இதெல்லாம் அஜித் காதுக்கு போகுமா? அவர் ரசிகர்களின் ஏக்கத்தை புரிந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.