பைரவா படத்தை கிண்டல் செய்தாரா பார்த்திபன் - புகைப்படம் உள்ளே!

January 12, 2017kalakkalcinema.com
C187exiXcAE_w6z

தமிழ் சினிமாவில் வார்த்தைகளால் ஜாலம் காட்டி புகழ் பெற்றவர் பார்த்திபன். நடிகர் மட்டுமல்லாது இவர் ஒரு நல்ல இயக்குனரும் கூட. இவரது இயக்கத்தில் சாந்தனு ஹீரோவாக நடித்திருக்கும் படம் "கோடிட்ட இடங்களை நிரப்புக". இப்படம் ஜனவரி 14-ல் திரைக்கு வருகிறது.


இப்படத்தின் விளம்பரத்துக்காக பார்த்திபன் வித்தியாச வித்தியாசமாக வாசகம் எழுதி வருகிறார். அதில் இன்று, " ஒரு பை - ரவாவில் 100 பேருக்கு கேசரி கிண்டலாம் - அதில் ரவையூண்டு சிதறினாலே கோடி எறும்பு உண்ணலாம்! Let's celebrate" என்று வாசகம் எழுதியுள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.