கொழுந்து விட்டு எரிய போகும் பிக் பாஸ் வீடு, ரசிகர்களை ஏமாற்றிய ஓவியா - பிக் பாஸ் கூத்து.!

June 18, 2018


உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்று தொடங்கியது.


bigg boss
இந்த சீசனில் ஓவியாவுடன் சேர்த்து 17 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இறுதி போட்டியாளராக ஓவியா உள்ளே வந்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.


ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. காரணம் ஓவியா சிறப்பு விருந்தினராக மட்டுமே உள்ளே சென்றுள்ளதாக கமல்ஹாசன் கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.


bigg boss

மேலும் பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளை சந்தித்து பிரிந்து வாழ்ந்து வரும் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் உள்ளே சென்றுள்ளனர். இவர்களால் தினம் தினம் பிரச்னை ஏற்பட்டு பிக் பாஸ் வீடே கொழுந்து விட்டு எரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.