ஜூலை 27-ல் விஜய் சேதுபதியுடன் போட்டி போடும் இரண்டு படங்கள் - ஜெயிக்க போவது யார்?

July 16, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தற்போது ஜூங்கா படத்தை தயாரித்து நடித்துள்ளார். கோகுல் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூலை 27-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.


vijay sethupathy
இந்த படம் ஏற்கனவே சந்தோஷ் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கஜினிகாந்த் படத்துடன் மோத உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களுடன் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள மோஹினி படமும் திரைக்கு வர உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. திரிஷா விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.


vijay sethupathy

மேலும் கஜினிகாந்த் மற்றும் ஜூங்கா என இரண்டு படங்களிலும் சாயிஷா தான் கதாநாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று படங்களில் எந்த படம் வெற்றி பேர் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


vijay sethupathy