சிறுமி ஆசிபா என்ற 8 வயது குழந்தை கடத்தப்பட்டு கோவிலில் வைத்து 9 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் ஆசிபா கொலைக்கு நீதி கேட்டு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழில் ஒரு நாள் ஒரு கூத்து படத்தின் மூலம் அறிமுகமனான நிவேதா பெத்துராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நானும் 5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்.

அந்த வயதில் அதை பற்றி ஒன்று தெரியாது எப்படி பெற்றோர்களிடம் சொல்வது? குழந்தைகளுக்கு பெரும்பாலும் பாலியல் தொல்லைகள் உறவினர்களால் தான் ஏற்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருந்தால் தான் அமைதியாக வாழ முடியும் என கூறியுள்ளார்.