ஏப்ரல் 4-ல் அடுத்த பொது கூட்டம் கமல் அதிரடி அறிவிப்பு - எங்கே தெரியுமா?

February 22, 2018


உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முதல் தன்னுடைய முழுநேர அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். தன்னுடைய கட்சியின் சின்னத்தை வெளியிட்ட அவர் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் சூட்டியுள்ளார்.


kamalhaasan




அரசியல் கட்சியின் சின்னத்தையும், பெயரையும் நேற்று மதுரையில் நடந்த முதல் பொது கூட்ட மேடையில் அறிவித்தார். இதனையடுத்து தற்போது இரண்டாம் பொது கூட்டத்தை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.


ஆம், வரும் ஏப்ரல் 4-ம் தேதி திருச்சியில் அடுத்த பொது கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் அடுத்தடுத்த அறிவிப்பும் நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.