காவிரி தீர்ப்பு வரும் வரை என் படம் ரிலீஸ் ஆகாது - பிரபல தயாரிப்பாளர் அதிரடி முடிவு.!

April 20, 2018


தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இதனால் சென்னையில் நடைபெற்ற IPL கிரிக்கெட்டை எதிர்த்து குரல் கொடுத்தனர்.


cauvery
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை புதிய படங்கள் ரிலீஸ் செய்யாமல் இருக்கலாமே என விஷாலுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.


cauvery

இந்நிலையில் தற்போது உதயநிதி சொன்னதை போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை என்னுடைய படத்தை ரிலீஸ் செய்யமாட்டேன் என Mr. சந்திரமௌலி பட தயாரிப்பாளர் தனஞ்சயன் கோவிந்த் அதிரடியாக அறிவித்துள்ளார்.


இதற்காக காவிரி தீர்ப்பு வந்த பிறகு அதாவது மே 3-ம் தேதிக்கு பிறகு தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்ய கோரி தயாரிப்பாளர் சங்கத்திற்கும் வேண்டுகோள் வைத்துள்ளார். இவருடைய இந்த முடிவு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.