காலாவை விட மெர்சல் தான் பெஸ்ட் - முக்கிய பிரபலத்தின் கருத்தால் சர்ச்சை.!

June 20, 2018


தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இவருக்கு அடுத்தாக தளபதி விஜய் தான் மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


kaala
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து மெகா ஹிட்டானது, அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படம் அரசியலை பேசும் படமாக இருந்தது.


ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூலில் சூப்பர் ஸ்டாரின் மற்ற படங்களை விட கொஞ்சம் மந்தம் என கோலிவுட் வட்டாரங்களில் நிறைய தகவல்கள் கசிந்து இருந்தன.


kaala

இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சி சமீபத்தில் தன்னுடைய நடிப்பில் உருவாகியுள்ள டிராபிக் ராமசாமி படத்தை பற்றி அளித்த பேட்டியில் காலாவை விட மெர்சல் தான் பெஸ்ட் எனவும் இது போன்ற சமூக அக்கறை உள்ள படங்கள் வெளியாவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

விஜயின் தந்தை இவ்வாறு கூறியிருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏன் காலா படத்திற்கு என்ன குறைச்சல் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.