மெர்சல் சாதனையை முறியடித்ததா 2.O டீஸர் - உண்மை என்ன?

September 14, 2018


தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு இடையே போட்டி இருக்கோ இல்லையோ நிச்சயம் ரசிகர்களுக்கு இடையே போட்டியும் பிரச்னையும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.


mersal
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 2.O படத்தின் டீஸர் நேற்று இணையத்தில் வெளியாகி இருந்தது.


அப்போது தளபதி ரசிகர்கள் மெர்சல் டீஸர் சாதனையை முறியடிக்குமா என சவால் விட்டு இருந்தனர். தற்போது 2.O டீஸர் ஒரே நாளில் 24 மில்லியன் ஹிட்ஸ் அடித்து மெர்சல் சாதனையை முறியடித்துள்ளது.


mersal

மெர்சல் டீஸர் ஒரே நாளில் 10 மில்லியன்களுக்கும் அதிகமாக ஹிட்ஸ் அடித்து இருந்தது. மேலும் 2.O டீஸர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழி டீசரையும் சேர்த்து 24 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.