கூகுளையே அதிர வைத்த மெர்சல் - சூப்பர் ஹிட் புகைப்படம் உள்ளே.!

August 12, 2017


தளபதி என்றாலே அவரது நடிப்பையும் ரசிகர்களின் பலத்தையும் யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவர் தற்போது பிரம்மாண்டமான கதை களத்தில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார்.


mersal
இந்த படத்தில் இருந்து முதல் முதலாக ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் வெளியாகி அனைவரையும் மெர்சலாக்கியது, தமிழனின் பெருமை, பாரம்பரியம் ஆகியவற்றை வரிகளாக கொண்டுள்ள இந்த பாடல் ரசிகர்களால் தெறிக்க விடப்பட்டு இந்திய அளவில் ட்ரெண்டாக்கப்பட்டது.


இதனை பற்றி கூகுள் நிறுவனத்தின் கூகுள் இந்தியா பக்கத்தில், இந்த வாரம் அதிகமாக மெர்சல் ட்ரெண்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.

அதனுடன் சந்திர கிரகணம் மற்றும் Raksha Bandhan போன்ற விஷயங்களும் டிரண்டாகி உள்ளதாக கூறியுள்ளது.