அமலாபாலுக்கு மீண்டும் திருமணம் - மாப்பிள்ளை இவர் தான்.!

July 17, 2017


தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வருபவர் அமலா பால், தற்போது மீண்டும் நிறைய படங்களை கை வசம் வைத்துள்ளார். இவருக்கும் இயக்குனர் விஜய்க்கும் திருமணமாகி விவாகரத்து ஆனது நாம் அனைவரும் அறிந்ததே.


amalapaul
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மீண்டும் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது ஒரு தயாரிப்பாளருடன் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.


மேலும் அந்த தயாரிப்பாளருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாம், இருவர் வீட்டிலும் பேச்சு வார்த்தை நடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் வீட்டில் திருமணத்திற்கு பிறகும் குழந்தைகள் இவர்களுடன் தான் இருப்பார்கள் என நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.