மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!

மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!

October 12, 2017


ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, எஸ்.ஜே.சூர்யா, ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவான ஸ்பைடர் படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியானது.


magesh babuரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த படம் மகேஷ் பாபுவிற்கு மிக பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.


தயாரிப்பாளருக்கு குறைந்தது ரூ 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது, ஆனால் அதே தயாரிப்பாளர் படம் ரூ 150 வசூல் செய்துள்ளது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படம் தமிழில் ஓரளவிற்கு நல்ல வசூலை பெற்றுள்ளதாம், தெலுங்கில் படு தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

வெளியாகியுள்ள இந்த தகவல்களில் எது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.