ஷாந்தனுவுக்கு அடித்த அதிர்ஷ்டம், முன்னணி பிரபலங்களுடன் கூட்டணி - புகைப்படம் உள்ளே.!

March 14, 2018


தமிழ் சினிமாவில் திரைக்கதை வல்லுனராக விளங்கி வருபவர் பாக்யராஜ். இவருடைய மகன் ஷாந்தனுவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தொடர்ந்து வெற்றிக்காக போராடி வருகிறார்.


shanthanu
இந்நிலையில் தற்போது ஷாந்தனுவுக்கு சரியான வாய்ப்பு அமைந்துள்ளது. முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஸ்கின் இயக்க உள்ள அடுத்த படத்தில் சாந்தனு நாயகனாக நடிக்க உள்ளார்.


மேலும் இவர்கள் இணைய உள்ள இந்த படத்தை இந்தியாவின் ஈடு இணையில்லாத ஒளிப்பதிவாளரான பி.சி ராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.


இதனைப்பற்றி சாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய அடுத்த பிறப்பு, வாழ்த்துங்கள் என கூறியுள்ளார். வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் சாந்தனு.