அன்பு செழியனை கெட்டவராக சித்தரிக்கிறார்கள் - விஜய் ஆண்டனி அதிரடி அறிக்கை.!

November 23, 2017


கந்து வட்டி பிரச்சனையால் அசோக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகிலும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


vijay antonty
இதற்கு காரணமான அன்பு செழியன் பற்றியும் பைனான்சியர் என்ற பெயரில் அவர் செய்யும் அட்டகாசங்களை பிரபலங்கள் பலரும் கூறி வரும் நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் நானும் அன்பு செழியனிடம் கடன் வாங்கியுள்ளேன் ஆனால் ஒழுங்காக பணத்தையும் செலுத்தி வருகிறேன். இதனால் அவரால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அனைவரும் அவரை சற்று மிகப்படுத்துவது போல தெரிவதாக கூறியுள்ளார்.


இவருடைய இந்த அறிக்கை கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, ஏற்கனவே அன்பு செழியனுக்கு ஆதரவாக சீனு ராமசாமி கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Latest