சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

January 13, 2018


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவரின் படங்களை ஒப்பீடு செய்து எப்போதும் ரசிகர்கள் இணையத்தை பரபரப்பாக வைத்து கொள்வதை வழக்கமாக்கி விட்டனர்.


album
கடந்த வருடம் அஜித் நடிப்பில் விவேகம் படமும் விஜய் நடிப்பில் பைரவா மற்றும் மெர்சல் படமும் வெளியாகி இருந்தது, இந்த இரண்டு படங்களின் பாடல்களும் மெகா ஹிட் அடித்தது.


இந்நிலையில் தற்போது பிரபல மியூசிக் நிறுவனமான சோனி மியூசிக் கடந்த வருடத்திற்கான சிறந்த ஆல்பம் என மெர்சல் படத்தை அதிக்ராபூர்வமாக அறிவித்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது வழங்கியுள்ளது.

Latest