கவண் படத்தில் நான் காட்டியது இந்த டிவி சேனலைதான் - வெற்றிவிழாவில் கே.வி.ஆனந்த் ஓபன் டாக்!

April 21, 2017


தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இன்று முன்னணி இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்திருப்பவர் கே.வி.ஆனந்த். விஜய் சேதுபதி, டி.ராஜேந்திரரை வைத்து இவர் இயக்கியுள்ள கவண் படம் அண்மையில் வெளியானது.


kavan
London Channel


விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இல்லை என்றாலும் "லாஜிக் தேவையில்லை மேஜிக்கே போதும்" என்கிற அடிப்படையில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி தீர்க்கிறார்கள். இதன் விளைவாக இப்படம் ரூ. 25 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இதில் பேசிய கே.வி.ஆனந்த், " லண்டனில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி தங்களது ரியாலிட்டி ஷோவில், வேண்டுமென்றே போட்டியாளர்களை அழ வைத்த சம்பவங்கள் உண்டு. அதைத்தான் இந்த படத்தில் பதிவு செய்தேன்" என்றார்.