கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்

August 17, 2018


'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்க, "லைக்கா புரொடக்ஷன்ஸ்" தயாரிப்பில் அனிருத் இசையில், நெல்சனின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் வித்தியாசமும், விறுவிறுப்பு மான படம் தான் "கோலமாவு கோகிலா".


kolamaavu kokila
Kolamaavu Kokila Tamil Review


கதைப்படி, அப்பா ஏடிஎம் வாட்ச்மேன், அம்மா கேன்சர் பேஷண்ட், தங்கை காலேஜ் ஸ்டூடன்ட்.... இவர்களை வறுமை வாட்டி வதைக்க, வேலை பார்க்க போகும் இடங்களில் எல்லாம் கோகிலா - நயன்தாராவை காதலிப்பதாகவும், படுக்கைக்கு அழைத்தும் பலரும் படுத்தி எடுக்க, கோகிலா - நயன்தாரா, "கோல மாவு" கோகிலா ஆகிறார். அதாகப்பட்டது, அம்மாவின் வைத்திய செலவுக்காக கொக்கைன் போதைபவுடர் கடத்தல் கும்பலில் சேர்ந்து கடத்தலில் இறங்குகிறார். அதில் காசு பணம் சேர்த்து அம்மாவையும், குடும்பத்தையும் கேன்சரில் இருந்து மீட்டதுடன் போதை கும்பல் டான் ஆனாரா? அல்லது, போலீஸில் சிக்கி சிறைக்கு சென்று செத்து மடிந்தாரா..? என்பது தான் "கோலமாவு கோகிலா" படத்தின் கதையும், களமும் ஆகும்.

"கோல மாவு" கோகிலாவாக நயன்தாரா, காட்சிக்கு காட்சி, பவுடர் கடத்தும் பாப்பாவாக பக்காவாக நடித்து பலே, பலே சொல்ல வைக்கிறார்.


Kolamaavu Kokila Movie Review


அதிலும், தன்னை படுக்கைக்கு அழைக்கும் மேலதிகாரியிடம், ஆரம்பத்தில் பயந்த சுபாவம் உடைய பெண்ணாக காட்சி தரும் நான், வேலை செய்யும் இடத்தில், "அப்படி வெளியில மீட் பண்ணனும்னா, நான் ஏன் சார் உங்கள மீட் பண்ணப் போறேன்.


ஸ்டெயிட்டா ஜி.எம்மையே பார்த்து உங்க வேலையையே காலி பண்ணி, நானும், உயர்ந்து டமாட்டேனா?" எனக் கேட்கும் இடத்தில் தொடகி, முன்னு வந்துட்டா, யாரையும் விட்டுவைக்காது பழிவாங்குவதில் தொடர்ந்து க்ளைமாக்ஸில் குடும்ப சகிதமாக எதிராளிகளை கொண்று தீர்த்து விட்டு, போலீஸ் சரவணனிடம் "பெரிய திருடனை எல்லாம் பிடிக்கிறகன்னா நீங்க எவ்வளவு பெரிய திருடனா இருக்கணும்னு எகத்தாளம் பேசுவது வரை எக்குதப்பாக மிரட்டியிருக்கிறார். பேஷ், பேஷ்!

நயன்தாராவை ஒன்சைடாக லவ் பண்ணும் மளிகைக்கடை ஓனராக யோகி பாபு அசத்தல். நயனிடம், உன் வீட்டுக்கு எதிரே "சேகர்ஸ்டோர்ஸ் இருக்கே, அந்த் சேகரே நான் தான்... "என தன் லவ்வை கெத்தாக வெளிப்படுத்தி, க்ளைமாக்ஸுக்கு முன், நயனை போதை டான்கள் பலரும் ரேப் பண்ணுவதாக நினைத்து, "டேய் உள்ள வந்து ஒரு ஒரமா உட்கார்ந்துக் கறேன்டா" என கதறுவது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார்.

யோகி பாபு, மாதிரியே "நான் சுடவுள்" ராஜேந்திரன், பேச்சுக்கு பேச்சு தன் கட்டைக் குரலை வைத்துக் கொண்டு பழமொழி பலபேசி பண்ணும் அலப்பறை தியேட்டரில் கரகோஷம் காதை பிளக்கிறது. அதிலும், "நாளைக்கு மட்டும் சரக்கு அங்கு வரலை நீ பாய் அல்ல... கேர்ள்..." எனும் இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது.

"ப்ரோ, அவங்க ரேப் பண்ணது உங்க காதலிய மட்டும் தான்... உங்க காதல இல்ல... அதனால நீங்க காதல கண்ட்னி யூ பன்ணலாம் ப்ரோ" என்றும், "ப்ரோ'குடும்பமா கொலை பண்ணிட்டு வந்துருக்காங்க ப்ரோ..." என்று பதறும் இடங்களிலும் நயனின் தங்கை ஷோபியின் காதலரான புதுமுக இளைஞர் எதிர் பார்ப்பை கூட்டுகிறார்.

நயன்தாராவின் பேஷண்ட் தாயாக சரண்யா பொன்வண்ணன், அப்பா "அபூர்வ சகோதரர்கள்" சிவாஜி, போலீஸ் இன்ஸ்' "பருத்தி வீரன்"? சரவணன், அவரது மனைவி நிஷா அடியாள் தீப்பெட்டி கணேஷ்....மும்பை பாய், தங்கை ஷோபி, ஷோபியின் ஆர்வ கோளாறு லவ்வர்.... உள்ளிட்ட இணை, துணை பிற நட்சத்திரங்கள் அனைவரும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றன.

ஏ. அமரனின் கலை இயக்கம் கலக்கல் இயக்கம், ஆர்.நிர்மலின் படத்தொகுப்பு, பக்கா தொகுப்பு. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கன கச்சிதமாக படமாகியுள்ளன. நயன் உள்ளிட்டவர்களுக்கு அனுவர்த்தனின் உடை அலங்காரம் செம் கச்சிதம்.

அனிருத் இசையில் "எனக்கு இப்போ கல்யாண வயசுதான் உன்னால சிக்குறேன் தன்னால சொக்குறேன்..", "காயம் வருதே சாபம் தருதே... எதுவழியோ ,எதுவரையோ......", " வலி தாங்கல... அதனால வேற வழித் தெரியலை...." "நெஞ்சே..." உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் மிரட்டல்.

நெல்சன் தனது, எழுத்து, இயக்கத்தில், பிரபல பெரிய நாயகர்கள் நடிக்க வேண்டிய சாகசங்கள் நிரம்பிய ரோலில், நபன்தாராவை தைரியமாக நடிக்க வைத்திருப்பதும், அதில் இயக்குனர் எதிர் பார்த்ததிற்கும் மேல் நயன், நடித்திருப்பதும் பாராட்டிற்குரியது.

மேலும், "எவ்வளவு இறங்கி பேசினாலும் எகிறிப் பேசுறான் பாய்", "எனக்கு மைக் மோகனத் தவிர வேறு யாரும் தெரியாது...." எனும் நக்கல் நையாண்டி டயலாக் ஆனாலும், "இந்த தொழில்ல இதெல்லாம் ஒண்ணுமில்லே ... 8 பேரு போவான, 5 பேரு வருவான்....." என தாதாயிஸத்தை சர்வ சாதாரணமாக புரியவைக்க முயலும் டயலாக் ஆகட்டும், "ஒரு தப்பு எதையுமே சரி பண்ணாது. மேலும், மேலும் தப்புதான் பண்ணும்." எனும் தத்துவவித்துவ பன்ச் ஆகட்டும், சகலத்திலும் தனி முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர். சபாஷ்!

அதே மாதிரி, ஒரு சில இடங்களில் ஆக்ஷன் படங்களுக்கே உரிய லாஜிக் மிஸ்டேக்குகள் தெரிந்தாலும். தனது, வித்தியாசமும், விறுவிறுப்புமான காட்சிகளிலும், படத்தோடு இழையோடும் காமெடிகளிலும் தனி கவனம் செலுத்திமிரட்டி யிருக்கிறார் டைரக்டர் நெல்சன். மீண்டும், பாராட்டுத்கள்!

ஆக மொத்தத்தில், "கோலமாவு கோகிலா' - 'சபாஷ் நயன்தாரா!"

Rating: 3.5/5