மகள் வயது தமிழ் நடிகையை மணந்த கர்நாடக CM குமாரசாமி - வெளிச்சத்திற்கு வரும் புகைப்படங்கள்.!

May 23, 2018


நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்று அதிகமான தொகுதிகளில் ஜெயித்து வெற்றி பெற்றது, எடியூரப்பா முதல்வராகவும் பதவியேற்று பின்னர் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்னரே பதவி விலகினார்.


karanataka cm
பின்னர் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி முதல்வர் பதவியை கைப்பற்றியது. முதல்வராக மஜத தலைவரான குமாரசாமி பதவியேற்றார். இதனையடுத்து குமாரசாமியை பற்றிய தகவல்களையும் அவரது மனைவி பற்றியையும் இணையத்தில் தேடி வருகின்றனர்.


இவர் தன்னுடைய மகள் வயது நடிகையான குட்டி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இருப்பதும் இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்துள்ளது. குமாரசாமிக்கு முதல் திருமணம் நடந்த போது தான் குட்டி ராதிகா பிறந்துள்ளார் என்பதையும் நெட்டிசன்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.


karanataka cm

இவ்வளவு நாளாக குட்டி ராதிகாவை கண்டு கொள்ளாத நெட்டிசன்கள் தற்போது அவரை இணையத்தில் தேடி தேடி ட்ரெண்டாக்கியுள்ளனர். மேலும் அது எப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இரண்டாவது திருமணம் செய்யலாம் எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

மேலும் பலருக்கு தற்போதும் குட்டி ராதிகா குமார்சாமியுடன் தான் சேர்ந்து வாழ்ந்து வருகிறாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. குட்டி ராதிகா தமிழில் ஷாம், அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த இயற்கை படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest