துப்பாக்கி சூட்டிற்கு யார் அனுமதி கொடுத்தது? - கமல்ஹாசன் கொந்தளிப்பு.!

May 22, 2018


ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


sterlite
இதனால் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன. மக்கள் நீதி மன்றத்தின் தலைவருமான கமல்ஹாசனும் இது குறித்து வன்மையாக கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.


இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த யார் அனுமதி கொடுத்தது? எந்த அதிகாரி துப்பாக்கி சூடு நடத்தலாம் என யோசனை சொன்னது என கேள்வி எழுப்பியுள்ளார்.


sterlite

மேலும் இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒரு போதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் எனவும் ஆவேசமாகவும் கூறியுள்ளார்.

மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆலைகளுக்கு ஆதரவு அளித்து உங்களின் சுய லாபத்திற்காக பொது மக்களை கொள்வது தான் இந்த அரசா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Latest