டிடிக்கு ஆப்பு வைக்கும் கமல் - என்ன செய்யபோகிறார் தெரியுமா?

April 21, 2017


சின்னத்திரை நிகழ்ச்சி என்றாலே இன்று டிடி என்கிற திவ்யதர்ஷினிதான் சூப்பர்ஸ்டார். கடந்த சில வருடங்களாகவே இவர் நிகழ்சிகளுக்கு டிமாண்ட் அதிகம்.

இப்படியிருக்க இவருக்கு போட்டியாக ஒரு பிரபல நட்சத்திரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கால்தடம் பதிக்கிறார். அவர் வேறு யாருமில்லை, நம்ம உலக நாயகன் கமல் ஹாசன்தான்.


kamal haasan
Big Boss


பாலிவுட்டில் சக்கைப் போடு போட்டுவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் விரைவில் ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தால் தொடங்கவுள்ளது. பாலிவுட்டில் இந்நிகழ்ச்சியை அமிதாப்பச்சன், சல்மான்கான் போன்ற முன்னணி நடிகர்கள்தான் தொகுத்து வழங்கியுள்ளார்கள்.

எனவே கோலிவுட்டில் கமல் ஹாசன்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என அந்நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாம். இதற்காக கமல் ஹாசனிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் பட்ஜெட் வெறும் 100 கோடி தானாம்.