வெற்றிகரமாக அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன்.!

February 21, 2018


தமிழ் சினிமாவில் இரு மாபெரும் ஜாம்புவான்களாக விளங்கி வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன்.


kamalhaasan
இவர்கள் இருவருமே தற்போது தமிழக அரசியலில் புதிய கட்சி மூலம் அரசியலுக்கு வர உள்ளனர். இதற்காக இருவரும் மும்மரமாக களமிறங்கி அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் கமல்ஹாசன் இன்று காலை அப்துல் கலாம் வீட்டில் இருந்து தன்னுடைய நாளை நமதே என்ற அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும் கமலை அப்துல் கலாம் பேரன் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளார்.


அப்துல் கலாமின் சகோதரரிடம் இருந்து ஆசியை பெற்று கொண்ட கமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இன்று மாலை மாலை 6 மணிக்கு மதுரையில் நடைபெற உள்ள பொது கூட்டத்தில் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.