களவாணி-2 படத்தில் சூரிக்கு பதிலாக இவரா? - இது ஒர்க் அவுட் ஆகுமா?

June 13, 2018


தமிழ் சினிமாவில் விமல், ஓவியா இணைந்து நடித்து மெகா ஹிட்டான படம் களவாணி. இயக்குனர் சற்குணம் இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று இருந்தது.


kalavani 2
இதனையடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு வருகிறது. மீண்டும் சற்குணமே இயக்கும் இந்த படத்திலும் விமலுக்கு ஜோடியாக ஓவியா தான் நடிக்கின்றார்.


முதல் பாகத்தில் விமலுக்கு நண்பனாக சூரி நடித்திருந்தார், காமெடிகளிலும் தெறிக்க விட்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து இருந்தார். ஆனால் இவர் கால்ஷீட் பிரச்சனையால் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை.

அவருக்கு பதிலாக மீசையை முறுக்கு படத்தில் காமெடியனாக நடித்திருந்த ஆர்.ஜே.விக்னேஷ் நடிக்கின்றார். இவருடைய காமெடி இந்த படத்தில் ஒர்க் அவுட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


kalavani 2