ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் கடைக்குட்டி சிங்கம் - காத்திருக்கும் சர்ப்பிரைஸ்.!

July 11, 2018


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக சூர்யா கார்த்தி தற்போது முதல் முறையாக இணைந்து பணியாற்றியுள்ளனர். சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.


kadai kutty singam
சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர், சத்யராஜ், பானு பிரியா, சூரி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஜூலை 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நடிகர் கார்த்தி சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாக முக நூலில் ரசிகர்களுடன்உரையாடிய போது கூறியுள்ளார்.


அதாவது இந்த படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்துள்ளாராம். அது நிச்சயம் சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். சூர்யா ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


kadai kutty singam

மேலும் விவசாயம் சார்ந்த படம் என்பதாலும் கார்த்தி ஒரு விவசாயியாகவே வாழ்ந்து இருப்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காத்துக் கொண்டிருக்கிறது. தீரன் படத்தை போல இந்த படமும் கார்த்திக்கு நல்ல பெயரை தேடி தரும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.