ஏலத்திற்கு வந்ததா கே.பாலச்சந்தரின் கவிதாலயா?- வெளிவந்த உண்மை தகவல்.!

February 13, 2018


தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மிக பெரிய ஜாம்புவான்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் கே.பாலச்சந்தர்.


k balachandhar
இவருடைய நிறுவனமான கவிதாலயா ஏலத்திற்கு வருவதாக பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த நிறுவனத்தில் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.


'கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தின் கையிருப்பு சொத்துக்களை வைத்து புதிதாக லோன் ஒன்றை வாங்க உள்ளதாகவும். அந்த லோன் மூலம் பழைய கடனை ஒரே தவணையில் திருப்பி செலுத்த உள்ளதாகவும் இதனால் ஏலம் என்பதெல்லாம் வெறும் வதந்திகள் தான் என கூறியுள்ளது.