சூப்பர் ஸ்டார் படத்தால் சுந்தர்.சி நாயகிக்கு அடித்த ஜாக்பாட் - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.!

May 17, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர்.சி. இவர் இயக்கத்தில் விரைவில் சங்கமித்ரா என்ற படம் தொடங்க உள்ளது. இந்த படத்தை ரூ 400 கோடி பட்ஜெட்டில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.


super star
ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க இருந்த படத்தில் இருந்து திடீரென அவர் விலகியதால் பாலிவுட் நடிகையான திஷா பதானி நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்காமல் இருந்து வருகின்றன.


இதனால் திஷா பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தனது காதலர் டைகர் ஷுராபுடன் சேர்ந்து நடித்த பாகி-2 படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து அவருக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் நடிக்கும் பாரத் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.


super star

பிரியங்கா சோப்ரா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் திஷா பதானி இரண்டாவது நாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இதனால் திஷா மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகிறார்.
Latest