அதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு ஆனால் பயமா இருக்கு - பிரபல நடிகை ஓபன் டாக்.!

அதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு ஆனால் பயமா இருக்கு - பிரபல நடிகை ஓபன் டாக்.!

October 12, 2017


இயக்குனர் மணி ரத்தினம் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக மாறுபட்ட கதைக்களங்களுடன் இருக்கும். இவருடைய படத்தில் நடிக்க அனைத்து நடிகர், நடிகைகளுக்குமே நிச்சயம் ஆசை இருக்கும்.


madhuஇவரது இயக்கத்தில் வெளியான ரோஜா படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது, இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் மது.


இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார், மணிரத்தினம் இயக்கத்தில் ரோஜா படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது, எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமும் அது தான் என கூறியுள்ளார்.


மேலும் மீண்டும் மணிரத்தினம் சார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன், அதற்காக அவரை அடிக்கடி சந்தித்து நான் இருக்கிறேன் என நினைவு படுத்திக் கொண்டே இருப்பேன் என கூறியுள்ளார்.

வாய்ப்புகள் அதிகமாக வருகின்றன, ஆனால் எனக்கு பிடித்த மாதிரி இல்லை. மேலும் குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனம், நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

படங்களை இயக்கவும் ஆசை அதிகமாக உள்ளது, ஆனால் அதற்கான தொழில் நுட்ப அறிவு என்னிடம் இல்லை என்பதால் எனக்கு பயமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.