சூர்யாவின் சிங்கம் படத்தில் நாயகியாக நடிக்க இருந்தது இவரா? - மிஸ் ஆகிடுச்சே.!

June 13, 2018


ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த சிங்கம் படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பரான வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இந்த படத்தில் நாயகியாக அனுஷ்கா நடித்திருந்தார்.


suriya
ஆனால் முதலில் இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக விக்ரம் தான் நடிக்க இருந்தார், அவர் நடிக்க மறுத்து விட்டதால் பின்னர் இந்த வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன.


அதே போல் நாயகியாக நடிக்க முதலில் ஹரி தமன்னாவை தான் அணுகினாராம், அப்போது கால்ஷீட் பிரச்சனையால் தமன்னா நடிக்க முடியாமல் போக பின்னர் பாவனாவை அணுகியுள்ளனர். பாவனா இந்த படத்தை வேண்டாம் என நிராகரித்து விட்டாராம்.


suriya

இதனையடுத்து தான் ஹரி அனுஷ்காவை கமிட் செய்தாராம். அனுஷ்காவும் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து கொடுத்து விட்டதால் இந்த கூட்டணி 3 பாகங்களிலும் தொடர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமன்னா, பாவனா ஆகியோரின் ரசிகர்கள் இப்படி சிங்கம் படத்தை மிஸ் பண்ணிடீங்களே என வருத்தப்பட்டு வருகின்றனர்.
Latest