விண்ணை தாண்டி வருவாயா 2 படத்தின் நாயகி இவரா? - கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்.!

August 10, 2018


தமிழ் சினிமாவில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் உருவாகி வெளியை சூப்பர் ஹிட்டாகி இருந்த படம் விண்ணை தாண்டி வருவாயா.


vinnai thaandi varuvaya
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் கெளதம் மேனன். இரண்டாம் பாகத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி பின்னர் மீண்டும் சிம்புவையே நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.


முதல் பாகத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவை நாயகியாக நடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.


vinnai thaandi varuvaya

இந்த தகவல் உறுதியானால் வானம் படத்தை அடுத்து சிம்புவுடன் இரண்டாவது முறை இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரண்டாம் பாகத்திற்கு விண்ணை தாண்டி வருவேன் என டைட்டில் வைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.